அதிர்ச்சி... 35 நாட்களில் 6 முறை பாம்பு கடி பெற்ற இளைஞர்!

 
விகாஸ் துபே

 உத்திரப்பிரதேச மாநிலத்தில் சௌரா கிராமத்தில் வசித்து வருபவர் 24 வயதான  விகாஸ் துபே.இவர்  ஜூன் 2ம் தேதி தூங்கி எழுந்த போது அவர் படுக்கையில் இருந்த பாம்பு  அவரை கடித்து விட்டது.  குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில்  அவர் நலமுடன் வீடு திரும்பினார்.  

பாம்பு

அடுத்த ஒரு வாரத்தில் மற்றொரு பாம்பு கடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை இடம் மாற்றினால் பாம்பு கடியில் இருந்து தப்பிக்கலாம் எனக்  கருதினார். இதனையடுத்து  உத்திரப்பிரதேச மாநிலத்தில் மற்றொரு பகுதியில் இருக்கும் அவருடைய அத்தை வீட்டில்  தங்கி இருந்தார்.
ஆனால் அங்கும் அவரை ஒரு பாம்பு கடித்துவிட்டது.  இப்படியாக கடந்த 35 நாட்களில் விகாஸை 6  முறை பாம்பு கடித்துள்ளது.

பாம்பு

அதே நேரத்தில் அவருக்கு ஒவ்வொரு முறையும் உடனடியாக உரிய மருத்துவம் குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்பட்டதால்  உயிர் தப்பியும் வருகிறார்.  அது மட்டும் அல்லாமல் பாம்பு கடிக்க வருவதை தான் முன்கூட்டியே உணர்வதாகவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தன்னை பாம்பு கடிப்பதாகவும்  தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web