இளைஞருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை... பாடலை பகிர்ந்ததால் விபரீதம்!

 
வடகொரியா
 


 

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன். இங்கு நடைபெறும் நிகழ்வுகள் எல்லாமே இன்னும் மர்மமாகவே உள்ளது. வடகொரியாவில்  சர்வாதிகார ஆட்சி நடந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.  வடகொரியாவை பொறுத்தவரை பெண்கள் மேக்கப், உடையில் இருந்து திரைப்படம் பார்ப்பது வரை மக்களின் சொந்த விஷயத்தில் கூட அரசின் தலையீட்டு இருப்பதுபோல சட்டங்களை அங்கு கொண்டு வந்தார்.  இங்கு தேர்லே கிடையாது. வொர்க்கர்ஸ் பார்ட்டி ஆப் நார்த் கொரியா  என்ற கட்சியை சேர்ந்தவர்கள் தான் காலம் காலமாக அதிபராக உள்ளனர்.

வடகொரியா


அங்கு மன்னராட்சி போலத்தான் அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.  வடகொரியா நாடு சீனா, ரஷ்யா உட்பட  நாடுகளுடன் மட்டுமே நெருக்கமாக செயல்படுகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கிம் ஜாங் உன் பல கட்டுப்பாடுகளை வழங்குவதால், உலக நாடுகள் அவரின் செயல்களுக்கு தொடர் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவர் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் ஆட்சி செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புதிய தகவல் வந்து உலக மக்களை திடுக்கிட வைத்தது. அதாவது, 22 வயதான இளைஞர் ஒருவர் கே பாப் பாடல்கள் மற்றும் 3 திரைப்படங்கள் பார்த்தார். அதாவது கே பாப்  என்பது பிரபலமான கொரிய இசை பாடல்களாகும். உலகம் முழுவதும் பல நாடுகளில் பிரபலமாக உள்ளது.

வடகொரியா


வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் பிரச்சனை உள்ள நிலையில், இந்த பாடல்களை கேட்க கிம் ஜாங் உன் தடை விதித்துவிட்டார். அந்த இளைஞர் அதனைப் பகிர்ந்தளித்தும் இருக்கிறார்.  பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாச்சாரத்தை தடை செய்யும் சட்டத்தை மீறியதாக கூறி தூக்கிலிடப்பட்டார்.  இதுகுறித்து அந்த மக்கள் இப்படியான அடிமையான வாழ்க்கை வாழ்வதற்கு பதில் சாவதே மேல் என கருத்து தெரிவித்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web