அதிவேகமாக வந்த பைக்... டிவைடரில் மோதியதில் தூக்கி வீசியதில் இளைஞர் பலி... பகீர் சிசிடிவி காட்சி!

 
ஷ்ரவன்


 
தெலுங்கானா மாநிலத்தில்  கஜ்வெல் நகரில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக்கில் சென்றார். பிரஜ்னாபூரில் வசித்து வரும் 18 வயது   ஷ்ரவன்குமார் யாதவ் தனது நண்பர் குண்டூர் மாவட்டத்தில் வசித்து வரும்  புசுலூரி திரிநாத்துடன் சிவாஜி சிலையிலிருந்து கஜ்வெல் விவேகானந்தர் சதுக்கம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டு இருந்தனர்.  


திரிநாத் முன்னால் வாகனத்தை ஓட்ட ஷ்ரவன்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது, ​​ரோட்டில் சென்று கொண்டிருந்த  கனகயா என்ற நபர் பைக் வேகமாக வருவதை கவனிக்கவில்லை.  அவர் மீது திரிநாத், ஷ்ரவன்குமார் யாதவ் இருவரும் வேகமாக வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கனகய்யா, திரிநாத் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.


பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த ஷ்ரவன் குமார் பறந்து டிவைடரில் விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கஜ்வேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 
இது குறித்து ஷ்ரவன்குமாரின் தந்தை  புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web