விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்.. தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் சுட்டுக்கொலை!

 
அமெரிக்கா

அமெரிக்காவில் சில ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. கேளிக்கை விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், மக்கள் கூடும் இடங்களில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதனால் மனிதர்களும் கொத்து கொத்தாக இறக்கின்றனர். இதேபோல் பள்ளிகளுக்குள் புகுந்தும் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். இதனால் பள்ளி குழந்தைகளும் உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது. 

அமெரிக்கா

இதனால் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை ஒடுக்க நடவடிக்கை தேவை என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஒருவர் கோபத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரம் நடந்துள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தின் சான் ஜசிண்டோ நகரைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவர், இரவில் துப்பாக்கியால் சுட்டு விளையாடியுள்ளார். இதனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர்களால் தூங்கமுடியவில்லை என தெரிகிறது. இதனையடுத்து ஒரு வீட்டார் எழுந்து துப்பாக்கியால் சுட்டு விளையாடிய நபரை அழைத்து கண்டித்துள்ளனர். 

அமெரிக்கா

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கண்டித்த நபரின் வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில், அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பிச்சென்ற சூழலில், காவல்துறையினர் அவரைத் தேடிவருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!