திரையரங்குகளில் இன்று முதல் கட்டண உயர்வு... சினிமா பிரியர்கள் அதிர்ச்சி... !!

 
தியேட்டர்

தீபாவளிக்கு இடையில் ஒரு நாளே உள்ளது. புத்தாடை, பட்டாசு வரிசையில் திரையரங்குகளில் புதிதாக வெளியாகும் படத்திற்கு டிக்கெட் முன் பதிவு செய்ய போட்டா போட்டி ஒரு புறம். மறுபுறம் திரையரங்குகளில் டிக்கெட் விலை அதிரடி உயர்வு. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரியில் நகர், புறநகர், கிராமப்புறங்களில் என 15க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன.

ஓடிடி திரையரங்கு

தியேட்டர்களின் பராமரிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என  தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் வல்லவன் கட்டணத்தை உயர்த்தலாம் என  அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் எலைட், பால்கனி, டீலக்ஸ் வகுப்புகளுக்கு ரூ.170, பிரீமியம் வகுப்புகளுக்கு ரூ.130 கட்டணமாக நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்வெழுத தடுப்பூசி கட்டாயம் ! புதுச்சேரி அரசு அதிரடி!

மற்ற ஏசி தியேட்டர்களுக்கு பாக்ஸ் ரூ.180, எலைட், பால்கனி, டீலக்ஸ், ரூ.170, முதல் வகுப்பு ரூ.130, 2ம் வகுப்பு ரூ.100, 3ம் வகுப்பு ரூ.60 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த கட்டண உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.இதனால் சினிமா பிரியர்கள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். இதனை மறுபரிசீலணை செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web