தமிழகத்தில் இலவசங்கள் கிடையாது... முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு... வைரலாகும் போஸ்டர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையில் கூட்டணி என்றும் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் பாஜக, திமுக கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என நடிகர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் அடுத்து வரும் 2026 ம் ஆண்டு தேர்தலை சந்திப்போம் எனவும், விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகர் விஜய் பற்றிய போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது இயக்குனர் கோபி இயக்கத்தில் யாதும் அறியான் என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இந்த திரைப்படம் 2026 ம் ஆண்டில் நடைபெறுவது போன்ற ஒரு காட்சி காட்டப்பட்டுள்ளது. அதில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு என்ற போஸ்டரை படத்தில் வைத்துள்ளனர். அந்த போஸ்டரில் தமிழ்நாட்டில் இலவசங்கள் கிடையாது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள் என ஒரு செய்தி தாள் வடிவில் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. க்ரைம் கில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாக நிலையில் அப்புகுட்டி மற்றும் தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
