12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை... திமுக அரசை விமர்சித்த எடப்பாடி!

 
ரேஷன் கடை

தமிழகத்தின் 12,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் பதிவு செய்த அவர், மாநிலம் முழுவதும் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மத்திய அரசு இந்த மாதத்திற்காக ஒதுக்கிய 8,722 டன் கோதுமையை தற்போதைய அரசு சரியாக விநியோகிக்காததாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

எடப்பாடி இபிஎஸ்

மேலும், இதற்கு முன்னர் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டதை நினைவூட்டிய அவர், நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பாட்டில் சோம்பேறித்தனமாக உள்ளது என விமர்சித்தார்.

ரேஷன் ஊழியர்

நெல் கொள்முதல் முதல் கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்கள் மக்களிடம் சேர்க்கும் பணியில் அரசு முழுமையான தோல்வியை சந்தித்துள்ளதாக ஈபிஎஸ் தெரிவித்தார். ரேஷன் கடைகளுக்கு கோதுமை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ரேஷன் பொருட்கள் தொடர்பான இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பில் பதில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க