பிரிட்ஜ், வாஷிங் மெஷின்னு எதுவுமே கிடையாது.. குடிசை வீட்டுக்கு கரெண்ட் பில் ரூ.1,00,000.. அதிர்ந்த உரிமையாளர்!

 
பாட்டி

சாதாரண வீடு தான் அது. வீட்டில் மிக்ஸி, க்ரைண்டர், ஏஸி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் என எதுவுமே கிடையாது. ஆனால், சாதாரண குடிசை வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.1.03 லட்சம்  வந்து அதிர வைத்துள்ளது. என்ன செய்வது என தெரியாமல் 90 வயசு  பாட்டி, மின்சார அலுவலகத்துக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த அதிர்ச்சி, சமீபத்தில் கர்நாடகாவில் வெற்றி பெற்று, வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்ந்துள்ளது. 

கர்நாடகாவில், சித்தராமையா தேர்தல் வாக்குறுதியில் ‘குருஹ ஜோதி’  திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என அறிவித்திருந்தார். ஆட்சியைப் பிடித்த நிலையில், இதற்கான உத்தரவும் வெளியிடப்பட்டு, திட்டம் நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டது. 

TNEB

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பாக்யா நகரில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வரும் கிரிஜாம்மா (90) என்கிற பாட்டி, இம்முறை தனக்கு கரண்ட் பில் வராது. இலவச 200 யூனிட்டில் வந்து விடும் என நினைத்திருந்தார். ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாகவே அவர் ரூ.80க்குள் தான் இதுவரை மின் கட்டணம் செலுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு ரூ.1,03,315 மின்சார கட்டணமாக வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல முறை மின் கட்டண அலுவலகத்திற்கு சென்று முறையிட்டும், அதிகாரிகள் இது குறித்து பெரியளவில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. வேறு வழி தெரியாத கிரிஜாம்மா தனக்கு வந்த மின் கட்டணம் குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார்.  ஊடகங்கள் இந்த பிரச்னையை மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜின் பார்வைக்கு கொண்டு சென்றதும், விசாரணையில் மீட்டரில் ஏற்பட்ட தவறால் அதிக கட்டணம் குறிப்பிடப்பட்டதாக தெரிய வந்தது.

Girijamma

சிரமத்திற்கு ஆளான பாட்டி, மின்சார கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அமைச்சர் கூறியுள்ள நிலையில், மின்வாரிய பணியாளர்களும், ரீடிங் எடுத்தவரும் இந்த தவறுக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web