1 முதல் 8 ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி விவகாரம்.. தேசிய கல்வி கொள்கை தமிழகத்திற்கு பொருந்தாது... அமைச்சர் திட்டவட்டம்!

 
பள்ளிக்கல்வித்துறை


இந்தியா முழுவதும்  மத்திய கல்வி அமைச்சகம் 1 முதல் 8 ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தது.  இது குறித்து  கல்வி உரிமை சட்டத்தில்  மாற்றம் கொண்டு வரப்பட்டு  5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொது தேர்வு போல தேர்வை நடத்தி அதில் ஒருவேளை சில மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் 2 மாதங்களில் வரும் மறுதேர்வு நடத்தி அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த வகுப்புக்கு அந்த மாணவர்கள் செல்ல முடியாது எனக் கூறப்பட்டது.  

மாணவிகள்
இந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற விதிமுறையின் கீழ் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. அதனால், மத்திய அரசு கொண்டு வந்த திருத்தம் தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா என கேள்விகள் எழுப்பப்பட்டது.  ஆனால், அதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அது குறித்து  ” மத்திய கல்வி அமைச்சகம் கொண்டு வந்த மாணவர்கள் தேர்ச்சி விதிமுறை திருத்தம், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி வரும் மாநிலங்களுக்கும், நவொதயா மற்றும் கேந்திரா வித்யாலயா பள்ளிகள், சைனிக் பள்ளிகளுக்கு மட்டுமே  இந்த விதிமுறை பொருந்தும், தேசிய கல்வி கொள்கையை ஏற்காத தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இந்த விதிமுறை பொருந்தாது”  என தெரிவித்துள்ளார்.

மாணவிகள்
ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டு தோறும் தர வேண்டிய ரூ.2,251 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படவில்லை. இது குறித்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு   நீங்கள் (தமிழக பள்ளிக்கல்வித்துறை) தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என நிபந்தனை விதித்ததாகவும், அதற்கு தமிழக எம்பிக்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!