சூப்பர்!! இவங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் கிடையாது!!

 
டோல்கேட்

இந்தியா  முழுவதும் உள்ள சுமார் 800க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. . இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.முன்பெல்லாம் சுங்கச் சாவடி கவுண்டர்களில் பணம் கொடுத்து கட்டணம் செலுத்தும் நடைமுறை வழக்கில் இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் பாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் ஆன்லைன் ரீசார்ஜ் முறையில் தங்கள் சுங்கக் கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம்.

சுங்கசாவடி டோல்கேட்
அதேநேரம் பாஸ்டேக்கில் இருந்து சில வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள், 2008ன் விதி 11-ன் படி, “பயனர் கட்டணம் செலுத்துவதில் இருந்து சில வாகனங்களுக்கு விலக்கு” தரப்பட்டள்ளது. அதேநேரம் கட்டணத்தில் விலக்கு என்றாலும் ட பாஸ்டேக்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களின் பட்டியலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சுங்கச்சாவடி

அதில், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், ஒன்றிய அமைச்சர், மாநில முதல்வர், உச்ச நீதிமன்ற நீதிபதி, மாநில அமைச்சர், யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர், தலைமை அதிகாரிகள், மாநில சட்ட மேலவை தலைவர், மாநில சட்ட மேலவை சபாநாயகர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர், இராணுவத் தளபதி, துணைத் தளபதிகள் மற்றும் பிற சேவைகளில் சமமானவர்கள், மாநில அரசு தலைமை செயலாளர், இந்திய அரசின் செயலாளர், மாநில கவுன்சில் செயலாளர், மக்கள் மன்ற செயலாளர், அரசுப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரமுகர், எம்எல்ஏ மற்றும் எம்எல்சி, பரம் வீர் சக்ரா, அசோக் சக்ரா, மகா வீர் சக்ரா, கீர்த்தி சக்ரா, வீர் சக்ரா மற்றும் சௌர்ய சக்ரா விருது பெற்றவர்கள், இந்திய டோல் (இராணுவம் மற்றும் விமானப்படை) சட்டம், 1901 27 இன் கீழ் தகுதியானவர்கள், ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வலம், இருசக்கர வாகனங்கள்  இவற்றுக்கு சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள் பாஸ்டேக் விண்ணப்பத்தின் போது, விண்ணப்ப படிவத்துடன் வாகனத்தின் ஆர்சி, ஆதார் அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ பான் அட்டை/ வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஒன்று, விலக்கு சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web