இந்தியனுக்கு சாவே கிடையாது... ரஜினி வெளியிட்ட மாஸ் வீடியோ!

 
இந்தியன் 2 கமல்

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன்2’ படத்தின் அறிமுக கிளிம்ப்ஸை ரஜினி, அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ’இந்தியன்2’ படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி வரும் நிலையில், படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 


தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்திற்கான அறிமுக கிளிம்ப்ஸை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் பல துறைகளில் லஞ்சமும் ஊழலும் பெருகி இருக்கிறது. பல பணக்காரர்கள் அடிமட்ட மக்களை எப்படி சுரண்டுகிறார்கள் என்பதை இந்த காலநிகழ்வுகளோடு காட்டியுள்ள ‘இந்தியன்2’, இதையெல்லாம் தட்டி கேட்க இந்தியன் தாத்தா திரும்ப வரவேண்டும் என்றும் கம்பேக் இந்தியன் என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்ட் செய்கிறார்கள்.

’இந்தியன்2’

‘எங்கு தப்பு நடந்தாலும் அங்கு இந்தியன் வருவான். அவனுக்கு சாவே கிடையாது’ என கமல்ஹாசன் இந்த அறிமுக டீசரின் ஆரம்பத்தில் பேசுகிறார். ஷங்கர் இயக்கத்தின் பிரம்மாண்டம் டீசரில் ஒவ்வொரு பிரேமிலும் பளிச்சிடுகிறது. அனிருத் இசையில் நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர், விவேக், மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா, ரகுல் என பலரும் நடித்துள்ளனர். இதில் கமலின் இந்தியன் தாத்தா தோற்றம் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமும், இதன் மூன்றாம் பாகம் ‘இந்தியன்3’ அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் மூன்றாவது பாகத்திற்காக நடிகர் கமல்ஹாசன் கூடுதலாக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web