இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் கிடையாது.. அமெரிக்காவில் புலம்பிய ராகுல் காந்தி!

 
ராகுல் மோடி

அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வாஷிங்டனில் உள்ள தேசியபிரஸ் கிளப் பில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது, இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கும். இந்த தேர்தல் முடிவு மக்களை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும். வரும் தேர்தலில் காங்கிரசும் சிறப்பான வெற்றியை பெறும். எதிர்க்கட்சிகளிடம் நல்ல ஒற்றுமை நிலவுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சிகளுக்கும், எங்களுக்கும் இடையே போட்டி நிலவும் தொகுதிகள் குறித்த விவாதத்தில் சில சிக்கலான நிலைமை உள்ளது. அதில் விட்டுக்  கொடுத்தல் அவசியம். ஆனாலும், மிகப்பெரிய எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவாகும். வெளிநாடுகளில் என்னை பேச அழைக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இப்படி அழைப்பதில்லை இது என் ? என்பது பற்றிய கேள்வியை மக்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன் என்றார்.

மோடி

கொலை மிரட்டல் பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லாரும் ஒரு நாள் சாக தான் போகிறோம். என் பாட்டி. தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடம் அது தான். இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் வலுவிழந்து வருகிறது. ஜனநாயகத்துக்கு பத்திரிகை சுதந்திரம் மிகவும் முக்கியமானது. 1947 ஆண்டுக்கு பின்னர், சுதந்திர இந்திய வரவாற்றில் அவமதிப்பு வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபர் நானாகத் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். 

முதல் குற்றத்தில் இவ்வளவு பெரிய அதிக பட்ச தண்டனை வேறு யாருக்கும் விதிக்கப்படவில்லை. பார்லிமென்ட்டில் அதானி ஹிண்டர்பர்க் விவகாரம் பற்றி நான் பேசிய பிறகு தான் என் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. என்னை மறுவடிவமைப்பு செய்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. இதனால் இந்த பதவி பறிப்பை ஒரு பரிசாக கருதிக் கொள்கிறேன் என கூறினார். 

ராகுல் மோடி

இந்நிலையில் பிரதமர் இந்தியாவைப் பற்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பொழுது எல்லாம் மட்டம் தட்டி பேசுகின்றார் எனக் கூறியவர், இப்பொழுது வெளிநாட்டில் போய் இப்படி புலம்பி இருக்கிறார்.

பாட்டியின் ஆட்சி காலத்தில் தான் எமர்ஜென்சி கொண்டு வந்தார். அப்பொழுது பத்திரிக்கை சுதந்திரம் என்ன பாடு பட்டது என்பது பாவம் பப்புவுக்கு தெரியாது என்பதோடு அவர்கள்  ஐ.டி விங்கை களமிறக்கி அலற விட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் ஒரு கார்டூன் வெளியிட்டு இருக்கிறது என்ற செய்தி  சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஆனால் fact check செய்ததில் அதில் உண்மை இல்லை என தகவல் கிடைத்தது. எது எப்படியோ 2024வரை நல்லா பொழுது போகும்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web