சின்ன சின்ன ஸ்டிக்கர்ஸ் கூட இருக்க கூடாது.. முழு வீச்சில் களத்தில் இறங்க நீதிமன்றம் உத்தரவு!

 
கார்

சென்னை மாநகரில் உள்ள தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகங்கள் மற்றும் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்துக் காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஸ்டிக்கர்

அந்த மனுவில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்றும், மதச் சின்னங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்களின் படங்களை ஒட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். வாகனங்களின் முன் மற்றும் பின் கண்ணாடிகள், பேருந்துகளின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முஹம்மது சபிக் தலைமையிலான அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகள் உட்பட அனைத்து வாகனங்களையும் உடனடியாக பறிமுதல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும்,  கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைச் சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் ஜூன் 20-ஆம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web