3 பேர் அத்துமீறி நுழைய முயற்சி... நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு!

 
நாடாளுமன்றம்  ஒத்திவைப்பு

 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மோடி நாளை 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்காக உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தில் டெல்லி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் 3 நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 பேர் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முயன்றதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றம்

அதன்படி காசிம், மோசின் மற்றும் சோயப் ஆகியோர் போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற நுழைவு வாயில் எண் 3ல் இருந்து நுழைய முயற்சித்துள்ளனர்.  அவர்கள் உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இச்சம்பவத்தால் பாதுகாப்பு படை மேலும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web