முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு.... பரபரப்பு!!

 
helicopter

தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்  ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை  அறிவித்து வருகிறார்.

சந்திரசேகரராவ்


 இன்று  மஹ்பூபா மாவட்டத்தில் உள்ள தேவரகத்ரா, மக்டல், நாராயணபேட் மற்றும் கட்வாலா சட்டமன்ற தொகுதிகளில்  நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபட இருந்தார்.இந்நிலையில்   எர்வள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து பிற்பகல் ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

ஹெலிகாப்டர்

அப்போது, ஹெலிகாப்டர் பறந்த சில நிமிடங்களிலேயே அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.  விமானி அதனை உடனடியாக கண்டறிந்து  விமானி ஹெலிகாப்டரை  தரையிறக்கினார். இதனால் ஏற்பட இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, விமானத்துறை அதிகாரிகள் வேறு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்தததையடுத்து, சந்திரசேகரராவ் தேர்தல் பிரசாரத்திற்கு தாமதமாக  புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web