‘மகளின் அந்தரங்க வீடியோ இருக்கு...’ போலியாக பணம் கேட்டு மிரட்டியதில் தாய் மாரடைப்பால் மரணம்!

 
போலியாக பணம் கேட்டு மிரட்டி
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில், ‘உங்க மகளின் அந்தரங்க வீடியோ இருக்கு. ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் அவற்றை வெளியிட மாட்டோம். இல்லையெனில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம்’ என்று போலியாக செல்போனில் ஆன்லைன் மோசடி கும்பல் மிரட்டியதைத் தொடர்ந்து தாய் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக நாடு முழுவதுமே டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ஷேர் மார்க்கெட் என்கிற பெயரில் மோசடிகள், ஆபாச வீடியோக்கள் இருப்பதாக மோசடிகள், கடன் செயலி மோசடி, போதைப் பொருட்கள் கடத்துவதாக மோசடி என்று லட்சக்கணக்கில் இந்த கும்பல் அப்பாவிகளிடம் பணம் பறிக்கிறார்கள். 


இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், அவளது ஆபாச வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் ஆன்லைன் மோசடி கும்பல் பொய்யாகக் கூறி, ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதால் பெண் ஒருவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

மால்தி வர்மா என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட பெண், செல்போனில் வந்த மிரட்டலையடுத்து உடனடியாக பேசிக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

போலியாக பணம் கேட்டு மிரட்டி

சைபர் குற்றவாளிகள் மால்தியைத் தொடர்பு கொண்டு உடனடியாக அவர்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், அடுத்த 2 மணி நேரத்திற்குள் தொகையை செலுத்தத் தவறினால் மகளின் ஆபாச வீடியோவை இணையதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். 

மகளின் ஆபாச வீடியோ குறித்த செய்தியைக் கேட்டதுமே அதிர்ச்சியடைந்த மால்தி வர்மா மாரடைப்பால் சுருண்டு விழுந்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் மால்தியைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!