வாக்குப்பதிவு குறையக் காரணங்கள் இவை தான்... அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள்!

 
தேர்தல்

 நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் சராசரியாக 69.46% மட்டுமே வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த 2019 பொதுத் தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகின. இந்த முறை வாக்குப்பதிவு குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும்  சென்னை போன்ற நகரங்களில் உள்ள வேற்றுத் தொகுதி மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டியிருந்தது. இதற்கான  போதுமான போக்குவரத்து வசதி இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  

தேர்தல்

பயணச் செலவுகள் , நடுத்தர வர்க்கத்தினர் பணத்தட்டுப்பாடு குறித்த தயக்கத்தாலும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்லவில்லை. இம்முறை தேர்தல் நாள் வார இறுதியில் வந்தது. இதனையடுத்து பலரும்   சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பங்களுடன்  சென்று விட்டதும் முக்கிய காரணமே.  இத்துடன் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழு அளவில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தேர்தல் புறக்கணிப்பு

அத்துடன் மிகக் குறிப்பாக லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருப்பதும் ஒரு காரணமாக உள்ளது.  ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் பிரச்சனைகளை வலியுறுத்தி மக்கள் தேர்தல் புறக்கணித்ததும்  வாக்குப்பதிவு குறைய காரணமாகும்.  கோடை வெயில் வாட்டி வதைத்ததால் பலரும் வாக்குச்சாவடிக்கு செல்ல மனமின்றி வீட்டிலேயே ஏசி ரூம்களில் அடைந்து கிடந்தனர் எனவும் கூறப்படுகிறது.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web