“எங்களை ஏமாத்திட்டாங்க”….. காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் தற்கொலை முயற்சி!

 
ஜிஜேஸ்


 
கேரள மாநிலம் வயநாடு காங்கிரஸ் கட்சியின்  மாவட்ட பொருளாளராக இருந்தவர்  விஜயன். இவருக்கு ஜிஜேஸ் என்ற மகன் இருந்தார். இதில் விஜய்யின்  கூட்டுறவு பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி  பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பல கோடி ரூபாய் வரையிலும் மோசடி செய்ததாக புகார் பெறப்பட்டது. 

விஷம்
இதன் காரணமாக வேதனையடைந்த விஜயன் தனது மகனுடன்  டிசம்பர் 27ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து  விஜய்  எழுதியிருந்த கடிதத்தில்  இப்பணத்தை கல்பெட்டா எம்எல்ஏ பாலகிருஷ்ணனிடம் கொடுத்ததாக சொல்லியிருந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் சமரச பேச்சு வார்த்தையில், இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக காங்கிரஸ் உரிய பணத்தை ஒதுக்கும் எனக் கூறியிருந்தது.

விஷம்
இந்த குற்றச்சாட்டை பாலகிருஷ்ணன் மறுத்து விட்டதால் பலரிடம் பெற்ற பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. தற்போது விஜயனுடைய மற்றொரு மகனான விஜேஷ் என்பவரின் மனைவி பத்மஜா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் .  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து  பத்மஜா  காங்கிரஸ் தலைவர்கள் எங்களை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளனர்.  பணத்தை உரிய நபர்களுக்கு செலுத்துவதற்காக எங்களுடைய வீடு உட்பட அனைத்து சொத்துக்களும் அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து முதல்வரிடம்  புகார் கொடுக்க இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?