சாப்பிடும் உணவில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. பகீர் கிளப்பிய டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்!
2022 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையம் சென்றார். அப்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவ பரிசோதனைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டது.
மேலும், தடுப்பூசி போடப்படாததால் அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். சில நாட்கள் ஆஸ்திரேலிய ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில், புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜனவரி 12 முதல் 26 வரை ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், உலகின் 'நம்பர் 7' வீரரான, 10 முறை பட்டத்தை வென்ற செர்பியாவின் 37 வயதான ஜோகோவிச், முதல் சுற்றில் ஆஸ்திரேலிய இளம் வீரர் நிஷிகேஷை எதிர்கொள்கிறார்.
இந்நிலையில், ஜோகோவிச் ஒரு ஆங்கில செய்தி சேனலிடம் கூறுகையில், "எனக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. கொரோனா காலத்தில் மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலில் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அப்போது, அவர்கள் எனக்கு விஷ உணவை பரிமாறினர். நான் செர்பியா திரும்பியபோதுதான் இதைப் பற்றி எனக்குத் தெரியவந்தது.
நான் இதை யாரிடமும் சொல்லவில்லை. நான் செர்பியா திரும்பியபோது, ஒரு நச்சுயியல் சோதனையில் என் இரத்தத்தில் அதிக அளவு ஈயம் மற்றும் பாதரசம் இருப்பது தெரியவந்தது. எனக்கு மெல்போர்ன் அல்லது ஆஸ்திரேலியா மீது எந்த வெறுப்பும் இல்லை. நான் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு முறை நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுக்குச் சென்றபோது, பழைய நினைவுகளால் நான் வேதனைப்பட்டேன்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!