“கல்யாணத்துக்காக வெச்சிருந்த 22 சவரன் நகைகளைத் திருடிட்டாங்க...” எல்லையில் சிஆர்பிஎப் பெண் போலீஸ் கதறும் வீடியோ!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த நாராயணபுரம் பகுதியில் வசித்து வருபவர் 65 வயது குமாரசாமி. இவரது மகள் 32 வயது கலாவதி. ஜம்மு காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.) போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஜூலை 24ம் தேதி அதிகாலை குமாரசாமி தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார் அப்போது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 சவரன் நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து குமாரசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வரும் அவரது மகள் கலாவதி எங்கள் வீட்டில் எங்கள் அப்பா விவசாய நிலத்திற்கு சென்ற போது யாரோ வீட்டின் பூட்டை உடைத்து எனது திருமணத்திற்காக வைத்திருந்த 22 சவரன் நகைகள், பட்டு புடவை, மற்றும் ரூ.50000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டார்.

இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் தாமதமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். ஆனால் இதுவரை நகையை கண்டுபிடித்து கொடுக்கவில்லை. எனது திருமணத்திற்காக வாங்கி வைத்த நகைகள் எல்லாம் திருடு போய்விட்டது. எனக்கு யாருமே உதவவில்லை என சீருடையில் அழுதபடி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
