திருடச்சென்ற இடத்தில் ஏசி போட்டு தூங்கிவிட்ட திருடன்... போலீசிடம் வசமாகி சிக்கிய விபரீதம்!

 
திருடன்

 உத்திரபிரதேசம் மாநிலத்தில்  லக்னோவில் திருடன் ஒருவன் திருடச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிவிட்ட கதை வைரலாகி வருகிறது.  லக்னோ பகுதியில் வசித்து வரும் பாண்டே ஒரு வேலையாக வெளியில் சென்று இருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசுக்கு போன் செய்தனர்.

போலீஸ்
போலீசார் உடன் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஏசியை போட்டுவிட்டு தலையணை போட்டு திருடன் ஒருவன்   வசதியாக  தூங்கிக் கொண்டிருந்தான். இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து அவனை எழுப்பி விசாரணை நடத்தினர். அவன் போதையில் இருந்ததால் அவன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். திருடன் இது குறித்து போதை தலைக்கேறியதால் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு பிறகு திருடிச் செல்லலாம் என திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web