திருடச்சென்ற வீட்டில் ஜாலியாக பக்கோடா சுட்டு சாப்பிட்ட திருடர்கள்… !

நொய்டாவில் ஒரே பகுதியில் அமைந்துள்ள அடுத்தடுத்த 7 வீடுகளில் சில மர்ம நபர்கள் திருடச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பூட்டி இருந்த வீட்டிற்குள் திருடச் சென்றபோது அங்கிருந்த பொருட்களை வைத்து பக்கோடா போட்டு சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
பாத்ரூமில் சிகரெட் துண்டுகள் மற்றும் பீடா போன்றவற்றை ஆதாரங்களாக விட்டுச் சென்றுள்ளனர்.இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுபோன்ற செயலை 7 வீட்டிலும் தொடர்ந்து செய்த திருடர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாகதான் இருக்க வேண்டும் என போலீசார் முடிவு செய்துள்ளனர். வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!