வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு... மர்ம நபர்கள் கைவரிசை!
![நகை கொள்ளை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/0a1c26a76514884073e4108499b286fd.jpg)
தூத்துக்குடி மாவட்டம் ஜாகீர் உசேன் நகரில், வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் ஜாகீா் உசேன் நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி சுமதி(45) கடந்த சில தினங்களுக்கு முன்னா், வீட்டின் கதவை சாத்தி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமாா் 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து சுமதி தாளமுத்துநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகையை பதிவு செய்தனர்.
நகைகளை திருடி கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!