அபார்ட்மெண்ட் மாடிகளில் குடிநீர் குழாய்களைத் திருடி செல்லும் கொள்ளையன்... வெளியான சிசிடிவி காட்சிகள்!

 
சென்னை

சென்னையின் புறநகர் பகுதிகளான போரூர் அருகேயுள்ள கொளப்பாக்கம், எம்.ஆர்.கே நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊராட்சி குடிநீர் குழாய்கள் அடிக்கடி காணாமல்போவதாக புகார் கூறப்படுகிறது.

குடிநீர் குழாய்கள் இல்லாததால் குடிநீர் வீணாக சாலைகளில் செல்வதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், எம்.ஆர்.கே நகர் பகுதியில் குடிநீர் இணைப்பு குழாய்களை இளைஞர் ஒருவர் திருடிச்செல்வது அம்பலமாகியுள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு பைக்கில் வரும் இளைஞர் குடிநீர் இணைப்பின் குழாய் திருடியது சிசிடிவியில் பதிவாகியுளளது.

சென்னை

அதாவது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில், அடுக்குமாடி குடியிருப்பு நிறைந்த தெருவுக்குள் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து அங்கிருந்த குழாயைத் திருடிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

சென்னை

இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மாங்காடு போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர். குழாய்கள் திருடப்படுவதால் மாலை நேரத்தில் தண்ணீர் வரும் சமயத்தில் அதிக அளவில் குடிநீர் வீணாவதாக அங்குள்ள மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web