1000 ஆண்டுகள் பழமையான அழகிய பெருமாள் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்... !
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல ஆலயங்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் அந்த ஊரை சேர்ந்த மக்கள் தாங்களே முன் வந்து நிதி திரட்டி பழங்கால கோவில்களை அதன் கலைநயம் குறையாமல் புதுப்பித்து வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான ஆலயம் அழகிய பெருமாள் கோவில். இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையான கோவில்.

அங்கு வசித்து வரும் மக்கள் காலம் காலமாக இங்கு வழிபாடு செய்து வருகின்றனர். ஆனால் சிதிலமடைந்து ஆலயத்தின் உள்ளே செல்லவே பயந்து வந்த பொதுமக்கள் இதற்கு ஒரு விடிவு வராதா என காத்திருந்தனர். பலதரப்பு வகையான ஆலோசனைகளுக்கு பிறகு ஊர் மக்கள் தாங்களே மனமுவந்து பெருமாள் கோவிலை புதுப்பிக்க உறுதிபூண்டனர். அதன்படி ஆலயத்திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் சென்ற மாதம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருந்த அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கும்பாபிஷேகத்தை அடுத்து அழகிய பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று ஜூலை 29ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த திருக்கோவிலில் திருவிழா இந்த திருக்கோவிலில் திருவிழா நடைபெற்ற அனைத்து நாட்களிலும் ஜாதி, மத பேதமின்றி அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவம் ஒவ்வொரு நிகழ்வும் திருப்பதி பெருமாள் கோவிலில் நடப்பது போன்றே நடத்தப்படுகிறது. விழாவின் இறுதி நிகழ்வாக அழகிய பெருமாள் வீதி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து திரும்பினர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தலைமை அர்ச்சகர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஓம் நமோ நாராயணாய!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
