தொல். திருமா உற்சாகம்... எனது 25 ஆண்டு கால கனவு... நெகிழ்ச்சி!

 
திருமா

இந்தியா முழுவதும் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2  தொகுதிகளில்  போட்டியிட்ட விசிக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சி அந்தஸ்து வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. இது குறித்து  அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்  விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

திருமா
இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. அதன் பிறகு வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின், திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.  1999 லிருந்து விசிக  இயக்கம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும் எனத் தொடர்ந்து  போராடிக் கொண்டிருக்கிறது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 25 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது. அத்துடன்  தேர்தல் ஆணையம் மாநில கட்சி அந்தஸ்து வழங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web