திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு... சிபிஐ குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியது நீதிமன்றம்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில், சிபிஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையை, குறைகள் உள்ளதாக கூறி மாவட்ட நீதிமன்றம் திருப்பி அனுப்பி வைத்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்ட் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது. அதன்படி, குறிப்பிட்ட தேதியில் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், குறைகள் உள்ளதாகக் கூறி, அதை நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
