திருவண்ணாமலை தீபத்திருவிழா கோலாகலத் தொடக்கம்..!!

 
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின்  தீபத்திருவிழாவை முன்னிட்டு நகரின்   காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.   அங்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடத்தப்பட்டது. 
 இதன் பிறகு  துர்க்கை அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து  அருள்பாலித்தார். கார்த்திகை தீப திருவிழா வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிபாடு செய்தனர்.  

பஞ்சபூத தலங்களில் நினைத்தாலே முக்தி தரும் அக்னி தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீப உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  அந்த வகையில் நடப்பாண்டுக்கான தீபத் திருவிழா   காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை தீபம்


அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் 17 நாட்கள்  தொடர்ச்சியாக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டும்   காவல்தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் இன்று மாலை தொடங்க உள்ளது. இதனையடுத்து  அண்ணாமலையார் கோயிலில்  தங்கக்கொடி மரத்தில் நவம்பர் 17ம் தேதி அதிகாலை 4.45 மணி முதல் 6.12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.   அதன் பிறகு, பஞ்சமூர்த்தி களின் 10 நாள் உற்சவம் தொடங்கி காலை மற்றும் இரவு நடைபெறும். நவம்பர் 22ம் தேதி காலை 63 நாயன்மார்களின் உற்சவமும், அன்றிரவு வெள்ளி  வாகனத்தில் தேரோட்டமும் நடை பெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் நவம்பர்  23ம் தேதி  நடைபெற உள்ளது.   நவம்பர் 24ம் தேதி மாலை 4 மணிக்கு பிச்சாடனார்   உற்சவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 26 ம்தேதி நடைபெறவுள்ளது.  அன்று அதிகாலை மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு  பரணி தீபமும்  மாலை  பஞ்சபூதங்களும் பரம்பொருளே என்பதை உணர்த்த,  ஏகன் - அநேகன் தத்துவம் மூலம் எடுத்துரைக்கப்படும். அதன்பிறகு, பிரம்மதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.அர்த்தநாரீஸ்வரர் காட்சி: தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, மாலை 5.55 மணியளவில் தங்கக்கொடி மரம் முன்பு, ஆண் - பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், 'அர்த்தநாரீஸ்வரர்' காட்சி கொடுப்பார்.  

திருவண்ணாமலை

மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668அடி உயரம் உள்ள 'திருஅண்ணாமலை' உச்சியில் பருவத ராஜகுல வம்சத்தினர் 5 அடி உயரம் உள்ள கொப்பரையில் மகா தீபத்தை நவ. 26-ம் தேதி மாலை 6 மணியளவில் ஏற்றி  வைப்பர்.  அதைத் தொடர்ந்து தங்க ரிஷப வாகனங் களில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலா நடைபெறும்.மகா தீபத்தைத் தொடர்ந்து, ஐயங்குளத்தில் 3 நாள் தெப்ப உற்சவம் நடைபெறும்.   நவம்பர்  27ம் தேதி இரவு சந்திரசேகரர், 28ம் தேதி இரவு பராசக்தி அம்மன், 29ம் தேதி முருகரின் தெப்பல் உற்சவம் நடைபெறும்.  17வது நாளான நவம்பர்  30-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன்   கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web