“இது அள்ளிக் கொடுக்கின்ற ஆட்சி... உண்டியலில் விழுந்த ஐ-போன் இன்று உரியவரிடம் தரப்படும்” - அமைச்சர் சேகர்பாபு

 
கந்தசாமி திருக்கோயில்


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி திருக்கோயில் உண்டியலில் தவறி விழுந்த பக்தரின் ஐ போன், இன்று பக்தரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலுக்கு உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல் வெளிமாவட்ட, வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலின் உண்டியல் கடந்த 6 மாதங்களுக்கு பின்பு திறக்கப்பட்டது. 

சேகர்பாபு

இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தாலி பொட்டு, கண்மலர், வேல், பண முடிப்பு, சில்லறை நாணயங்கள், கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் என்று ரூ.52 லட்சமும், 289 கிராம் தங்கமும் 6920 கிராம் வெள்ளியும் எண்ணப்பட்டது. 

கூடவே பக்தர் தவற விட்ட ஐ-போனும் கோயில் உண்டியலில் இருந்துள்ளது. அது யாருடைய செல்போன் என்று ஆய்வு மேற்கொண்டதில் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருடையது என்பது தெரிய வந்துள்ளது. 

ஸ்டாலின் சேகர்பாபு

உண்டியலில் விழுந்த பொருட்கள் சாமிக்கே சொந்தம் என்பதால் அதை திருப்பி ஒப்படைக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இந்த ஆட்சி கொடுக்கின்ற ஆட்சி, எடுக்கின்ற ஆட்சியில்லை. இந்த ஆட்சி அள்ளி கொடுக்கின்ற ஆட்சி. ஆகவே திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த செல்போன், உரிய நபரிடம் நிச்சயமாக இன்று ஒப்படைக்கப்படும்” என தெரிவித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web