இது எங்க வழி.. சடலத்தை கொண்டு போகாதீங்க.. எதிர்ப்பு தெரிவித்த நபரை கண்டித்து போராட்டத்தில் குதித்த உறவினர்கள்!

 
அம்முக்குட்டி

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியடி அருகே அம்முக்குட்டி (80) என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அவரது உடல் தகனம் செய்வதற்காக சுடுகாடு அருகே உள்ள அவர்களது சொந்த நிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஒருவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தார்.  “இந்தப் பாதை எங்களின் பாதை” சடலத்தை எடுத்து செல்லக் கூடாது என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆனைப்பாறை பக்கிவல பகுதியில் சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். 'ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாடு சாலையை உடனடியாக கையகப்படுத்த வேண்டும், சொந்த நிலத்தில் தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததையடுத்து மூதாட்டியின் உடலை உறவினர்கள் தகனம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web