ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்!! ரயில்வே அமைச்சர் பரபரப்பு தகவல்!!

 
rail

நேற்று முன் தினம் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள்  அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பலரது நிலைமை மேலும் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புக்கள் அதிக்கரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.  அந்த பகுதியில் விபத்தில் உருக்குலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


 

சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பாலசோரில் விபத்து நடந்த பகுதியில் நடந்து வரும் மீட்பு பணிகளை 2வது நாளாக மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.  எதிர்க்கட்சிகள் அவரை விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தி வருகின்றன. இதற்கு பதில் அளித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் " ரயில் விபத்தை அரசியல் ஆக்க வேண்டாம். ராஜினாமா செய்வதை காட்டிலும் விபத்து பொறுப்பேற்று நிவாரண மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டிய நேரம் இது. தற்போது வரை கோரமண்டல் ரயில்  விபத்தில் பலியான அனைத்து சடலங்களும் அகற்றப்பட்டுள்ளது.

ஒடிசா விபத்து

ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடத்த இடத்தில்  புதன்கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் சேவையை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தால் இந்தியா முழுவதும் செல்ல உள்ள 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 45 மாற்று ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை வரட்டும் ஆனால் சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த சம்பவம் நடந்தது எனத் தெளிவுபடுத்தியுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web