தமிழகத்தில் மருத்துவர்கள் சாதனை... உயிர் பிழைத்த இளம்பெண்...!

 
தமிழ்செல்வி

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி என்ற பெண், 3 ஆண்டுகளாக வயிறு வீக்கம் மற்றும் வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டதால், மருத்துவமனையை நாடினார். சில மருத்துவமனைகளுக்கு சென்றும் குணம் அடையாததால், ராமநாதபுரம் அருகே உள்ள வி.ஜி.எம் கேஸ்ட்ரோ மற்றும் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

அப்போது தமிழ்செல்விக்கு மருத்துவர் மோகன் பிரசாத் சிகிச்சை அளித்து, வயிறு பகுதியில் ஸ்கேனில் பார்த்தார். இதில், தமிழ் செல்வியின் வயிற்றில் பெரியளவில் கட்டி இருப்பது தெரியவந்தது. சினைப்பகுதியில் உருவான இந்த கட்டி, நுரையீரல், குடல், சிறுநீரகம், ரத்த நாளங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை அழுத்திக்கொண்டிருந்தன.

தமிழ்செல்வி

இதனால் வயிறு வீக்கம் ஏற்பட்டு மூச்சு திணறல் உண்டாது தெரியவந்தது. இந்த நிலையிலே டாக்டர் கோகுல் தலைமையில் கேஸ்ட்ரோ துறை, சிறுநீரக துறை, ரத்த நாள துறை, மயக்கவியல் துறைகளை சார்ந்த நிபுணர்களுடன் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சையில் மேற்கொண்டனர். மருத்துவமனையில் சுமார் நான்கரை மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், தமிழ் செல்வியின் வயிற்று பகுதியிலிருந்த 36 கிலோ அளவிலான கேன்சர் கட்டி அகற்றப்பட்டது. 

அந்த கட்டியின் எடை, உடல் குறைபாடுடன் வந்த தமிழ் செல்வியின் உடல் எடையில், சரி பாதி எடையாகும். தற்பொழுது தமிழ்செல்வி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒருவரின் வயிற்றிலிருந்து 36 கிலோ எடையுடன் கட்டி அகற்றப்பட்டது இந்திய அளவில் இது இரண்டாவது முறை.

தமிழ்செல்வி

முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் 40 கிலோக்கு மேல் எடையுடன் கூடிய கட்டி அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகின்றன. அதேநேரம் தமிழ்நாடு அளவில் முதலாவது பெரிய கட்டி அகற்றும் ஆபரேசன் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

 

From around the web