இதல்லவா துக்க வீடு.. இறந்தவரின் சடலத்துடன் கால்பந்து மேட்ச்சை மும்முரமாக பார்க்கும் குடும்பம்!

 
சடலம்

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்களில் சில பாராட்டுகளைப் பெற்றாலும், பல விமர்சனங்களைப் பெறுகின்றன. அந்த வகையில் தென் அமெரிக்காவில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது, அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காக இறந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருந்தது. சடலத்துடன் கால்பந்து போட்டியை பார்த்தனர். போட்டி முடிந்ததும் அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை டாம் வாலண்டினோ என்ற பயனர் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், சிலி மற்றும் பெரு அணிகளுக்கு இடையே கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையில், சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web