2024 தேர்தலில் 48 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்பி இவர் தான்!

 
ரவீந்திரா

 தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியாகியுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு  மோடி மீண்டும் ஆட்சியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.  இந்நிலையில் 2024 தேர்தலில் மும்பை வடமேற்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவு வேட்பாளர் ரவீந்திரா தத்தாராம் வைக்கருக்கு 4,52,644 வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றுள்ளார்.  

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்
அவருக்கு அடுத்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வேட்பாளர் அமோல் கஜனன் கிர்திகாருக்கு 4,52,596 வாக்குகள் கிடைத்துள்ளன.  இதன்மூலம் வைக்கர் 48 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  2024 தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாச வெற்றியாக பார்க்கப்படுகிறது.  
மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளிலும், “INDIA” கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web