நெகிழ்ச்சி... 10 வருடங்கள் போராடி கோமாவிலிருந்து கணவரை மீட்ட மனைவி!
தனது கணவர் மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்ற நிலையில், தீராத அன்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமாக ஒரு குழந்தையைப் போல அவரைக் கடந்த 10 வருடங்களாக பராமரித்து வந்த நிலையில், மீண்டும் கணவனை சுயநினைவுக்கு மீட்டெடுத்திருக்கிறார் மனைவி. சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் வசித்து வரும் சன் ஹாங்சியா என்பவருடைய கணவர் கடந்த 2014ல் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
திரைப்படங்களில் வருவதைப் போல, அவரு எப்போது எழுந்திருப்பார் என தெரியவில்லை... அடுத்த வாரமும் ஆகலாம்... அடுத்த வருஷமும் ஆகலாம், எழுந்திருக்காமலேயே கூட போகலாம்... நாளைக்கே எழுந்தாலும் எழுந்திருக்கலாம் என்று கைவிரித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில், கடந்த 10 வருடங்களாக கோமாவில் இருந்த தன்னுடைய கணவரை ஹாங்சியா அன்பும், அக்கறையுமாக கவனித்துக் கொண்டார். கணவர் நிச்சயம் குணமடைந்து கோமாவில் இருந்து மீள்வார் என்று உறுதியான நம்பிக்கையில் கடந்த 10 வருடங்களாக கவனித்து வந்துள்ளார்.
குழந்தைகளும், தங்கள் தந்தையை மீட்டெடுக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் தினந்தோறும் தந்தையுடன் பேசி, பரிவுடன் கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு ஹாங்சியாவின் கணவர் கோமாவிலிருந்து மீண்டுள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த ஹாங்கியா கடந்த காலங்களில் நடந்த அனைத்து விஷயங்களையும் அவருக்கு நெகிழ்ச்சியுடன் கூறினார். ஹாங்கியாவின் உண்மை காதல் 10 வருடங்களுக்குப் பிறகு கோமோவில் இருந்த தன் கணவரை மீட்டு கொடுத்துள்ளது என்று நெகிழ்ச்சியாக பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!