'இந்த வெற்றியும் உனக்கே...' நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு காதல் கடிதம் எழுதிய விராட் கோலி!

 
விராட்

இந்த வெற்றி எனக்கும், உனக்கும் தான் என்று தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை அனுஷ்கா சர்மா விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ந்து பேசினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக விராட் கோலி தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கு நன்றியையும் அன்பையும் தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனுஷ்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள விராட் கோலி, அதில் " நீங்கள் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை. நான் உங்களுக்கு நன்றி சொல்ல முடியாது. இந்த வெற்றி எனக்கும் உங்களுக்கும் தான். நன்றி மற்றும் நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்”என்று பதிவிட்டுள்ளார்.

விராட்

அனுஷ்கா ஷர்மா நேற்று வெளியிட்ட பதிவில், ``எல்லா வீரர்களும் டிவியில் அழுவதைப் பார்த்து யாராவது கோலியைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது எங்கள் மகளின் மிகப்பெரிய கவலை. அப்போது நான் சொன்னேன். ஆம், அவரை 1.5 பில்லியன் மக்கள் கட்டிப்பிடித்தனர். என்ன ஒரு அற்புதமான வெற்றி. சாம்பியன்ஸ், வாழ்த்துக்கள் என்று எழுதியிருந்தார். மற்றொரு பதிவில், அனுஷ்கா சர்மா, விராட் கோலி சிரித்து கோப்பையை உயர்த்தும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!


 

From around the web