தூத்துக்குடி : டாஸ்மாக் ஊழியரிடம் தகராறு... பிரபல ரவுடி கைது!

 
பால்பாண்டி

தமிழகம் முழுவதும் போதை கலாசாரம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நகருக்கும் ஒரு டாஸ்மாக் கடை என்பதை கொள்கையாக வைத்திருப்பதைப் போல எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளின் வியாபாரத்தை அதிகரிப்பதை கொள்கையாகவே வைத்திருப்பதைப் போல செயல்பட்டு வருவதாக பொதுமக்களிடையே குறிப்பாக பெண்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி அருகே ஓசியில் மது கேட்டு டாஸ்மாக் ஊழியரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம்  மணியாச்சி மருதன்வாழ்வு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் பால்பாண்டி (46) என்பவர் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணி அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மேற்படி டாஸ்மாக் கடைக்கு சென்ற முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்த பூவன் (எ) அய்யாதுரை மகன் வேம்படிமுத்து (எ) சின்ன முண்டன் (36) என்பவர் டாஸ்மாக் ஊழியர் பால்பாண்டியிடம் பணம் கொடுக்காமல் மதுபாட்டில் தருமாறு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

இது குறித்து பால்பாண்டி அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகாராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி வேம்படிமுத்து (எ) சின்ன முண்டன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web