தூத்துக்குடி : சாலை விபத்தில் பூ வியாபாரி உயிரிழப்பு!

 
விபத்து

கயத்தாறு அருகே அருகே பைக் விபத்தில் பூ வியாபாரி பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகையா மகன் இருளப்பன் (58). இவர் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் இரவு 11 மணியளவில்  கடையை அடைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் கயத்தாரில் இருந்து நாகலாபுரத்திலுள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

தற்கொலை

மதுரை மெயின் ரோட்டில் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சாலையில் திரிந்த மன நோயாளி குறுக்கே வந்ததில்  பைக் விபத்துக்குள்ளானது. இதில் இருளப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கயத்தாறு சப் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பள்ளி மானவி தற்கொலை

இறந்து போன இருளப்பனுக்கு காளியம்மாள் என்ற மனைவியும், முத்துக்குமார் என்ற மகனும், இந்திரா, சந்திரா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். விபத்து குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web