தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 443ம் ஆண்டு திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 443ம் ஆண்டு திருவிழா வருகிற 26ம் தேதி தொடங்க இருப்பதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 26ம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3ம் தேதி புதுநன்மை விழா, நற்கருணை பவனி நடக்கிறது. 4ம் தேதி இரவு 7 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனை, 5ம் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி, இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி ஆகியவை நடக்கிறது. இத்திருவிழாவிற்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இதை தொடர்ந்து இத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திருவிழா ஏற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட அனைத்து முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

இந்நிலையில் திருவிழா முன்னேற்பாடு பணிகளில் ஆலய நிர்வாகத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது ஆலயத்தில் மராமத்து செய்து, மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோன்று ஆலயத்திற்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, நகர வீதிகளில் சாலைகளை சீரமைத்தல், தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
