தூத்துக்குடி : இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை... பழிக்கு பழியாக அரங்கேறிய கொடூரம்!

 
கொலை

பழிக்கு பழியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர் தலையை துண்டித்து, தலையை ஓரிடத்திலும் உடலை வேறொரு இடத்திலும் வீசிச் சென்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் ஒரு தலை மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அந்த தலையை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி

விசாரணையில் கொலை செய்யப்பட்டது டிஎம்பி காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து விசாரணையை விரிவுபடுத்திய போது, அவரது உடல் மையவாடி என்ற இடத்தில் கிடப்பது  தெரியவந்தது.

பின்னர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் கடந்த ஏப்ரல் மாதம் அவரது உறவினரான சப்பானி முத்து என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

எனவே அதற்கு பழிவாங்கும் வகையில் சப்பானி முத்துவின் உறவினர்கள் மாரியப்பனை கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web