சொந்த வாகனங்களில் வெளியூர் போறவங்க இந்தப் பக்கமா போகாதீங்க... போக்குவரத்து காவல்துறை திடீர் அறிவிப்பு!
ஜனவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று முதல் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ரயில், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
மக்களின் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்களில் இருந்து கூடுதல் அரசுப் பேருந்துகளும், மாநகர இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்களுக்கு வழித்தட மாற்றம் செய்யவும் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வெளியூர் செல்பவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்வதை தவிர்த்து, (ஓஎம்ஆா்) திருப்போரூா் - செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருங்களத்தூர் அருகே ரயில்வே பால வேலைகள் நடைபெற்று வருவதால் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், மதுரவாயல் புறவழிச்சாலை மூலம் வெளியேறுவதையும் தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!