10 நாட்களுக்குள் அதிமுகவிலிருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்... செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் . இவர் சமீபகாலமாக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அவர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

நான் அதிமுக கட்சியில் 1972 ம் ஆண்டு கிளை செயலாளராக சேர்ந்த போது 1975 ம் ஆண்டு என்னை பொருளாளராக நியமித்த அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர். 1977ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் நான் போட்டியிட்ட போது எம்ஜிஆர் என்னிடம் என்னுடைய பெயரை உச்சரி நீ வெற்றி பெறுவாய் எனக் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து யாரேனும் விலகி சென்றால் அவர்களின் வீட்டிற்க்கே சென்று எம்ஜிஆர் நேரடியாக அழைப்பார்.

2017 ம் ஆண்டு கடுமையான சோதனைகள் ஏற்பட்டபோது முன்னாள் முதல்வர் மற்றும் தற்போது எதிர்க்கட்சித் தலைவரை நாங்கள் தேர்வு செய்தோம் என எடப்பாடி பழனிச்சாமி எண் பெயரை குறிப்பிடாமல் கூறினார். அதிமுக உடைய கூடாது என்பதற்காக தனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் நான் தியாகம் செய்தேன். 2017 ம் ஆண்டு பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து அடுத்து வரும் தேர்தலை சந்திக்க வேண்டும்.
கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் எந்தவித கோரிக்கையும் இன்றி கட்சியில் இணைய தயாராக உள்ளனர். மேலும் அதிமுகவிலிருந்து விலகி சென்றவர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் அந்தப் பணிகளை நாங்களே முடிப்போம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கெடு விதித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
