’மிரட்டி பலமுறை பலாத்காரம்’.. யூடியூபரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கிய இளம்பெண்!

 
ரவிராஜ்

கர்நாடக மநிலம் கொப்பல் மாவட்டம் கரடக்கி பகுதியில் வசித்து வருபவர் ரவிராஜ். அவர் ஒரு யூடியூப் பிரபலம். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு  கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததும் காதலை கைவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால் கண்டுகொள்ளாததால் இரு வீட்டாரும் சம்மதித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

பாலியல் வன்கொடுமை

அதன்படி, 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண ஏற்பாடுகள் நடந்தபோது ரவிராஜ் இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.  இந்த வீடியோவை காட்டி மிரட்டிய அவர், பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் கர்ப்பமாக இருக்கும் போதே கருக்கலைப்பு செய்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இதனால் அந்த பெண் இருமுறை தற்கொலைக்கு முயன்றதையடுத்து உறவினர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தற்போது கொப்பல் காவல் நிலையத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த பெண் தனது காதலனை கைது செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web