அடுத்தடுத்து 3 குழந்தைகள் மரணம்... ஒரே வாரத்தில் கர்ப்பிணி தாயும் உயிரிழப்பு... 5 மருத்துவர்களும் பணி இடைநீக்கம்!
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பெரும் துயர சம்பவமாக அடுத்தடுத்து தனது 3 குழந்தைகளையும் பறி கொடுத்த ஒரு வாரத்தில் 5 மாத கர்ப்பிணி தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்பட்டுத்தியுள்ளது.
மருத்துவமனையில் அலட்சியமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், கர்ப்பிணி பலியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பதால் கொத்ரன்கா பகுதியைச் சேர்ந்தவர் ரஜிம் அக்தர் (35). 5 மாத கர்ப்பிணியான இவர் உடல்நல பாதிப்புக்காக சிகிச்சை பெறுவதற்காக முதலில் கண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அதன்பின்னர் ரஜோரியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அவரை உறவினர்கள் சேர்த்தனர்.
இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியான அக்தர் சிகிச்சை பலனின்றி பலியானார். மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 மருத்துவர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர, துணை மருத்துவர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் 10 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இளம்பெண் உயிரிழப்பதற்கு முன்பாக அன்றைய இரவு நேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் இந்த 5 மருத்துவர்களும் இரவு பணியில் இருந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. 5 மருத்துவர்கள் பணியில் இருந்த நிலையிலும், யாரும் முறையாக சிகிச்சையளிக்காமல் அக்தர் மரணத்திற்கு காரணமாகி உள்ளனர்.
அந்த பெண் உயிரிழப்பதற்கு முன் கடந்த வாரம் மர்ம காய்ச்சல் காரணமாக அடுத்தடுத்து அவருடைய 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இந்த சோகத்தில் இருந்து வெளியே வருவதற்குள் அவரும் உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!