கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு... குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

 
முதல்வர் ஸ்டாலின்


மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டையபுரம் அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி

இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ராஜ்குமார், மகேஷ்குமார் ஆகிய இருவருக்கும் தலா ரூ.50,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

விபத்து

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே இன்று அதிகாலை சாலையின் ஓரமாக நின்றிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் மென் பொறியாளர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web