பதக்கங்களை கங்கையில் வீசுவோம்!! மல்யுத்த வீராங்கனைகள் ஆவேசம்!!

 
மல்யுத்த வீராங்கனைகள்

இந்தியாவின்  மல்யுத்த சம்மேளனத் தலைவர்  பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங்.இவர்  தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கு முழு பொறுப்பேற்கும் வகையில் பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும். அத்துடன் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உட்பட  ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள், வீராங்கனைகள்  டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மல்யுத்த வீராங்கனைகள்

 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நேற்றைய தினம்  புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில் நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.  காவல்துறையினர் வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி அவர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். அவர்களை கைது செய்து வழக்கும் பதிவு  செய்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின்  உட்பட பலரும் இதற்கு பெரும் கண்டனங்களை தெரிவித்தனர். 

மல்யுத்த வீராங்கனைகள்


அதே நேரத்தில் ஜந்தர் மந்தரில் போலீசார் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் வேறு இடம் ஒதுக்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே முன்பைவிட டெல்லி ஜந்தர் மந்தரில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ அமைச்சர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில்   வென்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசிவிடுவோம் என வீராங்கனைகள் அறிவித்துள்ளார்கள். மேலும் டெல்லி இந்தியா கேட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web