தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி விரட்டியடிப்பு...!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூலை 9ம் தேதி காலையில் 420 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று பாக் ஜலசந்தி கடலுக்குச் சென்றிருந்தன. மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 3 சிறிய ரக ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென மீனவர்களின் படகுகளை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்ததால் அச்சமடைந்த மீனவர்கள் மீன் மடிகளை இழுத்துக் கொண்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர்.

சில படகுகளை சிறைபிடிக்கும் நோக்கத்தில் தொடர்ந்து விரட்டிய இலங்கை கடற்படையின் பிடியில் சிக்காமல் இருக்க மீனவர்கள் வலைகளை கடலில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இலங்கை கடற்படை கற்களை வீசி விரட்டியடித்த சம்பவத்தை மீனவர்கள் தங்களின் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
