தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு!

 
மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை இந்த 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தற்போது மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மழை மேலும் நீடித்து வருகிறது.  இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து வருவதால், தமிழகத்திலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மழை

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web