குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். அந்த வகையில் இன்று பிற்பகல் குடியரசுத் தலைவர் முர்மு, சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தார்.அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் சென்ற குடியரசுத் தலைவர், மத்திய பல்கலைக்கழகத்தின் 10 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

இதனையடுத்து திரௌபதி முர்மு திருச்சியில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் வருகை தந்திருந்தார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, அரங்கநாத சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு பிற்பகல் 1 மணிக்கு பிறகு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணிக்கு மேல் பக்தர்களுக்கு வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தரிசனத்தை முடித்துவிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தில்லி திரும்புகிறார் .
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
