இன்று சென்னை மும்பை ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!! நள்ளிரவு முதலே காத்து கிடந்த ரசிகர்கள்!!

 
சேப்பாக்கம்

16வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள்  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள்  2 பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. முக்கிய நகரங்களில் நடைபெற்று வரும் போட்டிகளில்  சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. மே 6ம் தேதி சனிக்கிழமை  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன.

சென்னை மும்பை

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று மே 3ம்ட் தேதி புதன்கிழமை தொடங்க உள்ளது. இந்நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே  நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர்.  

சென்னை மும்பை

கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ1,500 முதல் ரூ3,000 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.  நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web